புதிய குற்றவியல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதிக்க வேண்டும் : வழக்குரைஞர்கள் சங்கம்

0 329
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 8 மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 குற்றவியல் சட்டங்கள் பாராளுமன்றத்தில் மீண்டும் விவாதத்திக்க வேண்டும் வழக்கறிஞர் சங்கங்கள் கோரிக்கை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழுவின் அவசர பொது பொதுக்கூட்டம் கடந்த 29.6.2024 அன்று சென்னை நடைபெற்றது.

அதில் புதிதாக வடமொழி தலைப்புடன் புதிய சட்டமாக்கப்பட்டுள்ள பிஎன்எஸ், பிஎன்எஸ்எஸ், பிஎஸ் ஆகிய சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறுதல் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானத்தில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என கடந்த 1 ஆம் தேதி முதல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து வழக்கறிஞர்களும் ஓன்றுக்கூடி (இன்று) திங்கட்கிழமை திருச்சியில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக திருச்சியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பாலசுப்ரமணியன்

மாநிலம் முழுவதும் இருந்து 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளும் பேரணி திருச்சி நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டு எம்ஜிஆர் சிலை வழியாக தென்னூர் உழவர் சந்தை மைதானம் வரை பேரணி நடைபெறும் எனவும் பேரணி பிறகு கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய சட்டம் திருத்தம் தொடர்பாக விவாதம் நடைபெற உள்ளது அதனை தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கான போராட்டம் குறித்து முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த புதிய சட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தண்டனைகள் அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதே சமயம் காவல்துறைக்கு சில சரத்துகள் அதிக வரம்பு உள்ளது.

மீண்டும் பாராளுமன்றத்தில் இந்த 3 புதிய சட்டங்களை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு இதில் உள்ள குறைகளை களைய வேண்டும் என தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது வழக்கறிஞர் நிர்வாகிகள் சுகுமார், சுதர்சன்,முத்துமணி , ஜாக் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.