திருச்சியில் கோஷ்டி மோதலில் ஒருவர் உயிரிழப்பு : 3 பேர் படுகாயம்

0 230
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 8  திருச்சி திருவானைக்கா அருகேயுள்ள திருவளர்ச்சோலை பகுதியை சேர்ந்த விக்னேஷ் பொன்னி டெல்டா பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் திருவளர்ச்சோலையில் பழக்கடை வைத்துள்ளார். இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், நாகேந்திரனுடன் சென்ற சங்கேந்தியை சேர்ந்த அவரது நண்பரும் சேர்ந்து விக்னேஷை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவரும் பதிலுக்குத் தாக்கியுள்ளார்.

இதையடுத்து நாகேந்திரனின் நண்பரின் ஆதரவாளர்களான திருவளர்சோலை கீழத்தெரு ஜான் மகன் நெப்போலியன், காமராஜ் மகன் கதிரவன், சேட்டு மகன் சங்கர், ரமேஷ் மகன் கமலேஷ் உள்ளிட்ட சிலர் விக்னேஷ் வீட்டுக்குச் சென்று அவரிடம் தகராறு செய்தனர். விக்னேஷ் தரப்பினரும் அங்கு குவிந்ததால் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

இதில் நெப்போலியன், கதிரவன், கமலேஷ் ஆகிய 4 பேருக்கும் பலத்த அடி மற்றும் கத்திக் குத்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் நெப்போலியன் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். மற்ற மூவரும் சிகிச்சை பெறுகின்றனர். தகவலறிந்த ஸ்ரீரங்கம் போலீஸார் நிகழ்விடம் சென்று பாதுகாப்பில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் திருவளர்ச்சோலை பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.