அனைத்து மதத்திற்கான வழிபாட்டு தலங்கள் : எஸ்.டி.பி.ஐ. கட்சி தீர்மானம்

0 258
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 18  பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகில் அனைத்து மதத்திற்கான வழிபாட்டு தலங்களை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அமைக்க SDPI கட்சி திருச்சி மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்

SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட சமூக ஊடக அணி சார்பாக சமூக செயற்பாட்டாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் சமூக ஊடக அணி திருச்சி மாவட்ட தலைவர் உபைதூர் ரஹ்மான்  தலைமையில் நடைபெற்றது.சமூக ஊடக அணி திருச்சி மண்டல தலைவர் KSA. ரியாஸ்  முன்னிலை வகித்தார்கள்.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினரும் திருச்சி மண்டல தலைவருமான இமாம் ஹஸ்ஸான் பைஜி அவர்கள் கலந்து கொண்டு சமூக ஊடக அணியின் முக்கியத்துவத்தினை பற்றி விரிவாக ஆலோசனை கூறினார்கள்.

மேலும் இந்நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் முகமது சித்திக், மாவட்டச் செயலாளர் தளபதி அப்பாஸ், மாவட்ட பொருளாளர் நியாமத்துல்லா ஆகியோர்கள் கலந்து கொண்டு திருச்சி தெற்கு மாவட்டத்தில் சமூக ஊடக அணியின் பலத்தினை பற்றி ஆலோசனை வழங்கினார்கள்.

இதில் சமூக ஊடக அணி செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.