என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமியில் குரூப் 2 வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
திருச்சி என் ஆர் ஐ ஏ எஸ் அகாடமியில் குரூப் 2 வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா இயக்குனர் விஜயாலயன் தலைமையில் நடைபெற்றது
திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் என் ஆர் ஐ ஏ எஸ் அகாடமி அமைந்துள்ளது இங்கு ஐஏஎஸ், ஐபிஎஸ்,ஐஆர் எஸ் மற்றும் மத்திய மாநில அரசுகள் நடத்தும் அனைத்து போட்டிக்கு தேர்வுகளுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது தமிழகத்தின் பல்வேறு பின்தங்கிய மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர் இந்த கல்வி நிறுவனத்தின் கடந்த 21 ஆண்டுகளில் பயிற்சி பெற்ற 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு அரசுத் துறைகள் அதிகாரிகளாக ஊழியர்களாக பணியாற்று வருகின்றனர் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கான பாராட்டு விழா என் ஆர் ஐஏஎஸ் அகாடமி அரங்கில் நடைபெற்றது இது இந்த கல்வி நிறுவனத்தின் நடைபெறும் கல்வி நிறுவனத்தில்நடைபெறும் 44 வது வெற்றி விழா நிகழ்ச்சியாகும் விழாவுக்கு அகடாமி இயக்குனர் விஜயலாயன் தலைமையில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றமாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் மேலும் கல்வியாளர்கள் சக மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.