மணப்பாறை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சி போலீசார் பழையபாளையம் பிரிவு ரோடு பகுதில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்குறிய வகையில் வந்த நபர் போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்றுள்ளார். அவரை பிடித்து விசாரணை செய்த நிவையில் அவரது கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் சுமார் ரூபாய் 16 ஆயிரம் மதிப்புள்ள 550 கிராம் கஞ்சா இருந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகில் உள்ள சாத்தம்பாடியைச் சேர்ந்த விஸ்வா (வயது 23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 550 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.