வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற பழங்கால சிலைகள் பறிமுதல்

0 239
Stalin trichy visit

 

திருச்சி, ஜூலை 9  வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு திருச்சி சிறப்பு குழுவினர் கடந்த 6-ம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தபோது, 3 அடி உயர திரிபுராந்தகர், 2. 75 அடி உயர வீணாதார தட்சிணாமூர்த்தி, 3. 25 அடி உயர ரிஷப தேவர், தலா 2. 75 அடி உயர மூன்று அம்மன் சிலைகள் என ஆறு உலோக சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

காரை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (42), மயிலாடுதுறை மாவட்டம் கொற்கை கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் ( 64), இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், லட்சுமணன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், புதிய வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் அமைக்க பள்ளம் தோண்டினார். அப்போது ஆறு ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளன. தொடர்ந்து ஐம்பொன் சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்க திட்டமிட்டனர்.

இதற்கிடையில், சமீபத்தில் ராஜேஷ் கண்ணனுக்கு சிலைகளை விற்கவும், வெளி நாடுகளுக்கு கடத்தவும் தொடர்பு கிடைத்தது. அதன்படி, ராஜேஷ் கண்ணனும், திருமுருகனும் கடந்த 5ம் தேதி நள்ளிரவு அவரது காரில் மயிலாடுதுறை கொருக்கை கிராமத்தில் உள்ள லட்சுமணன் வீட்டிலிருந்து, திருச்சி வழியாக சென்னை செல்லும்போது பிடிபட்டனர். இந்த சிலைகளின் விலை ரூ. 20 கோடிக்கு மேல் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.