JEE தேர்வில் வெற்றி பெற்று திருச்சி என்.ஐ.டி. யில் படிக்கும் வாய்ப்பு பெற்ற பழங்குடியின மாணவி
பொறியியல் நுழைவு JEE தேர்வில் வெற்றி பெற்று திருச்சி என் ஐ டி யில் படிக்கும் வாய்ப்பு பெற்ற பழங்குடியின மாணவி
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சமலை தொலை தொடர்பு, இணையதள சேவை , மின்சார வசதி குறைந்த அளவில் இருக்கும் ஒரு மலை பகுதியாக இருக்கிறது
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சை மலையை சேர்ந்த மலைவாழ் இன மாணவி ரோஹிணி.. துறையூர் பச்சமலை சின்ன இலுப்பூர் பகுதியில் உள்ள அரசு பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளியில் 12 வகுப்பு வரை படித்து அரசு தேர்வில் 423 மதிப்பெண்கள் எடுத்தார்.
அதன் பிறகு பொறியியல் படிப்பு படிப்பதற்காக JEE நுழைவு தேர்வில் 73.8 சதவீதம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இவர் திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது.
மலைவாழ் மக்களுக்கான பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை படித்து முடித்து ஜே.இ.இ நுழைவு தேர்வு எழுதினேன்.
அதில் 73.8 சதவீதம் தேர்ச்சி பெற்று திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் படிப்பதற்கு இடம் கிடைத்துள்ளது.. பொறியியல் படிப்பான பி.இ கெமிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவை தேர்வு செய்து உள்ளேன்.என் படிப்புக்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்
பள்ளியில் படித்த போது தேசிய தொழில்நுட்ப கழகத்தில் உள்ள கெமிக்கல் ஆய்வகத்திற்கு என்னை அழைத்துச் சென்றனர்.
அப்போது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக, ஆசிரியர்களிடம் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் சேர்க்கை பெற வேண்டும் என்று கேட்டேன்.
பள்ளியில் 12 ஆம் வகுப்பு தேர்விலும் ஜே இஇ தேர்விலும் தேர்ச்சி பெற்றதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் , உறவினர்கள் ஊக்கப்படுத்தி உதவி செய்தனர்.
என்னை ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மேல் படிப்புக்கு உதவி செய்யும் தமிழக முதல்வர் ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.