சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.81 லட்சம் பக்தர்கள் காணிக்கை

0 160
Stalin trichy visit

திருச்சி, ஜூலை, 10 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 81 லட்சத்து 37 ஆயிரத்து 930 கிடைக்கப் பெற்றுள்ளது. இக்கோயிலில் நேற்று நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்னும் பணியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பிச்சைமணி, இராஜ.சுகந்தி, சே.லெட்சும ணன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

நிறைவில் உண்டியல்களிலிருந்து ரொக்கமாக ரூ. 81 லட்சத்து 37ஆயிரத்து 930, தங்கம் 1 கிலோ 529கிராம், வெள்ளி 3 கிலோ 403 கிராம், 204 வெளிநாட்டு பணத் தாள்கள், 676 வெளிநாட்டு நாணயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலின் உபகோயில்களான ஆதிமாரியம்மன் திருக்கோயிலில் ரூ 1,50,480, உஜ்ஜயினி ஓம் காளியம்மன் திருக்கோயிலில் ரூ 11,352, போ ஜீசுவரர் திருக்கோயிலில் ரூ1,801-ம் கிடைக்கப்பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.