திருச்சி தேசிய கல்லூரி நடத்தும் மாபெரும் ஆன்லைன் ஓவியப்போட்டி

0 774
Stalin trichy visit

உலக போதை ஒழிப்பு தினத்தையொட்டி திருச்சி தேசிய கல்லூரி சார்பாக பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் ஆன்லைன் ஓவியப் போட்டியை நடத்தவுள்ளனர்.

 

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் தேதி உலக போதைப் பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சி தேசியக் கல்லூரியில் விளையாட்டுத்துறை சார்பாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் முறையில் ஓவிய போட்டியானது நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் பள்ளி மாணவ மாணவர்கள் வயது வரம்பின்றி அனைவரும் பங்கேற்கலாம். “போதைப்பொருள்கள் ஒழிப்பதன் மூலம் உயிரை காப்பாற்றலாம்”(Oppose Drug, Save Lives) என்கிற தலைப்பில் ஓவியங்கள் இருக்க வேண்டும். இதனை ஒரு தாளில் வரைந்து புகைப்படம் எடுத்து PDF ஆக மாற்றி nss@nct.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். புகைப்படங்கள் அனுப்ப கடைசி நாள் வருகின்ற (30/06/2021) தேதி ஆகும்.
சிறந்த புகைப்படங்களை அனுப்பும் மாணவர்களுக்கு  பாராட்டு சான்றிதழும் மற்றும் பரிசுகள் வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்களுக்கு 99941 18478 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பேசலாம்.

Leave A Reply

Your email address will not be published.