திருச்சியில் 16 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் – மாநகர காவல் ஆணையர் அதிரடி

0 416
Stalin trichy visit

திருச்சி மாநகர காவல் துறையில் 16 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி கோட்டை சட்டம்- ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக தயாளன், உறையூர் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டராக சண்முகவேல், தில்லைநகர் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டராக மணிராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

உறையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக சிவகுமார், வெடிபொருட்கள் கண்டறியும் பிரிவு இன்ஸ்பெக்டராக ராஜேந்திரன், குழந்தைகள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக கார்த்திகா, கோட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக அரங்கநாதன், பொன்மலை சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நிக்சன், கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக வேல்முருகன், கே.கே. நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக காவேரி, ஸ்ரீரங்கம் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பெரியசாமி, மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டராக விஜயகுமார்,
செக்யூரிட்டி பிரிவு இன்ஸ்பெக்டராக வெங்கடாசலம், ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக மீராபாய், மாநகர ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக கார்த்திகேயன், பாலக்கரை போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு இன்ஸ்பெக்டராக சத்தியநாதன் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் பிறப்பித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.