நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ நன்றி அறிவிப்பு கூட்டம்

0 228
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 13  நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ நன்றி அறிவிப்பு கூட்டம் – திமுக, விசிக உட்பட பல்வேறு கட்சியினர் வாழ்த்துரை வழங்கினர்.

நடந்து முடிந்த 18 வது நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் சார்பில் மதிமுக போட்டியிட்டது. மதிமுக சார்பில் துரை.வைகோ போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதைத் தொடர்ந்து திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட இந்தியா கூட்டணி கட்சியான திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மையம், ஆம் ஆத்மி உட்பட பல்வேறு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி -கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மாவட்டச் செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், சக்திஆற்றலரசு, ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இளங்கோ மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.