அரசு உதவி பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

0 231
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 15  தமிழக முதல்வரின் கனவு திட்டமான காலை சிற்றுண்டி திட்டத்தை திருச்சி  மாவட்டம், முசிறி ஒன்றியம், ஜெயம்கொண்டானில் அரசு உதவி பெறும் மான்ய துவக்க நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு பள்ளியில்  துவக்கி வைத்தார்.

தமிழக முதல்வர் பள்ளி குழந்தைகளின் நலன் கருதி தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் எனும் அற்புதமான திட்டத்தினை துவக்கி வைத்தார் மேலும் இதனை அடுத்து தமிழக முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஊரகப் பகுதிகளில் உள்ளபள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வர் அவர்கள் காலை சிற்றுண்டி திட்டத்தை இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று தொடங்கி வைத்தார் அதன் ஒரு பகுதியாக திருச்சி  மாவட்டம், முசிறி ஒன்றியம், ஜெயம்கொண்டானில் அரசு உதவி பெறும் மான்ய துவக்க நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு பள்ளியில்  துவக்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.