லாரியின் பின்புறம் தனியார் பேருந்து மோதியதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

0 236
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 15  திருச்சி குண்டூர் பகுதியில் உள்ள சிமெண்ட் ஆலை அருகே புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று சாலையில் முன்பு சென்று கொண்டிருந்த காரை முந்தி செல்ல முயன்ற போது சிமெண்ட் ஆலை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் லாரியின் பின்பக்கத்தில் மோதிய வேகத்தில் 20 அடி தூரம் சென்று விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர் இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர் அங்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைக்கு விபத்தில் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக அழைத்துக் சென்றனர். அப்போது தனியார் பேருந்தின் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார் உடனே அருகில் இருந்த பொதுமக்கள் அவரை விரட்டி சென்று பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் விபத்து குறித்து நவல்பட்டு போலீசார் விபத்து குறித்து தீவிரவாசனை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.