பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் 100 புதிய வீடுகள் கட்டும் பணி : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி, ஜூலை 15 துறையூர் அருகே 6.45 கோடி மதிப்பில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் 100 புதிய வீடுகள் கட்டும் பணி : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த தலுகை ஊராட்சிக்கு உட்பட்ட மங்கபட்டி புதூர் கிராமத்தில் வீடு இல்லாத அனைத்து தரப்பு பொதுமக்கள் பயனடையும் வகையில் பெரியார் நினைவு சமத்துவ புரத்தை ரூபாய் 6. 45 கோடி மதிப்பில் 100 புதிய வீடுகள் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்