மணப்பாறையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும் விழா!!

0 703
Stalin trichy visit

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நட்சத்திரமாகும், அதிக அளவு ரசிகர்களை கொண்ட ஒரு நடிகராக இருப்பவர் விஜய்.

 

இவர் தனது 47 வது பிறந்தநாளை வருகின்ற ஜூன் 22ஆம் தேதி கொண்டாட உள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மணப்பாறை விஜய் ரசிகர்கள் சார்பாக இரத்ததான முகாம், மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடினார்.
திருச்சி விஜய் ரசிகர் மன்ற தலைவர் R.K ராஜா  தலைமையில், மணப்பாறை விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள்  மணிகண்டன், நடேசன், டிவிஎஸ் டோல்கேட் ஜீவா, திருவெறும்பூர் பாரதி, ஜாபர் மற்றும் விஜய் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.