புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 48 ஆம் ஆண்டு திருவிழா

0 300
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 18 புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 48 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 48 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
இந்த திருவிழாவை முன்னிட்டு ஆலய பங்கு மக்கள் புனித கொடியை ஏந்தியபடி ஊர்வலமாக வீதிகளில் பவனி வந்து ஆலயத்தை சென்று அடைந்தனர் அதனைத் தொடர்ந்து திருச்சி மறை மாவட்ட பொருளாளர் ஜேம்ஸ் செல்வநாதன் மற்றும் புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் பங்குத்தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் ஆகியோர் திருக்கொடியை ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து  சிறப்பு திருப்பலியும், நற்கருணை ஆராதனை நடைபெற்றது.  மேலும் வருகிற 25ஆம் தேதி புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் ஆடம்பர திருத்தேர் பவனி நடைபெற உள்ளது முன்னதாக நேற்று நடந்த கொடியேற்று திருவிழாவில் ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டு புனித சந்தியாகப்பரின் அருள்  பெற்று சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.