திருவெறும்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு த.வெ.க. கட்சி கொடி கலரில் வர்ணம்
திருச்சி, மே 28 திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழக கட்சி வண்ணத்தில் வர்ணம் பூசப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் நவல்பட்டு விஜி. திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ளது. எப்பொழுதும் புதிதாக சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படும் போது அலுவலகத்தை சுத்தப்படுத்தி புதிய வண்ண பூச்சுகள் பூசி மராமத்து பணிகள் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், மக்கள் பயன்பாட்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, த.வெ.க. கட்சியின் அலுவலகம் போல மாற்றி, அதற்கு கட்சியின் கொடி வண்ணத்தைத் தீட்டியுள்ளார். அரசு அலுவலகத்தைப் பொதுவானதாக நடத்தாமல், கட்சி அலுவலகம் போல மாற்றிய சட்டமன்ற உறுப்பினரின் இந்தச் செயல் திருவெறும்பூர் பகுதி பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.