காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் : வடக்கு மாவட்ட செயலாளர் கலை அழைப்பு

0 288
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 19  திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பங்கேற்பு கட்சியினர் திரளாக கலந்து கொள்ள காங்கிரஸ் வடக்கு மாவட்ட செயலாளர் கலை அழைப்பு

திருச்சியில் நடைபெறும் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை வருகை தர உள்ளார். அதனை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கலை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

காங்கிரஸ் பேரியக்கமானது நெருப்பாற்றில் நீந்தி வந்த ஓர் பேரியக்கமாகும். அண்ணல் காந்தி, அன்னை இந்திரா காந்தி, முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோர் தங்களது இன்னுயிரை ரத்தம் சிந்தி இந்த பூமியின் விடுதலைக்கும், வளர்ச்சிக்கும், தியாகம் செய்துள்ளனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியினர் தியாகச் சீலர்களாக இந்திய வரலாற்றின் பக்கங்களில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தை அசைக்க முடியாத ஓர் மாபெரும் சக்தியாக உருவகிக்கும் பொறுப்பில் நமது தமிழகத்தின் மாநில தலைவர் செல்வபெருந்தகை செயலாற்றுகிறார். எதிர்க்கட்சியினரின் சதிகளை முறியடித்து தனது பேராற்றலை வெளிப்படுத்தி காங்கிரஸ் கட்சியின் தியாகத்தையும் அதன் பெருமையையும் தமிழக மக்கள் மீண்டும் நினைவு கூறும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தின் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க நமது மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று காலை (19.7.2024) திருச்சி எஸ்.கே.எஸ் மஹாலில்  நடைபெறும் திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். எனவே காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட, வட்டார தலைவர்கள், கிளைக்கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர் அணியினர், ஊடகப் பிரிவினர், இளைஞர் அணியினர் திரளாக கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் காங்கிரஸ் கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கலைகூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.