ஒருங்கிணைந்து செயல்பட்டால் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வசமாகும் : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு

0 223
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 19  திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம்  திருச்சி எல்.கே.எஸ் மகாலில் இன்று நடந்தது . திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் வரவேற்றுப் பேசினார். திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி கலை, திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத், மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி ஆகியோர் பேசினர் .

நிறைவாக  தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.

அவர் பேசும் போது,  ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இடத்தில் பரிணாம வளர்ச்சி ஏற்படுகிறது மோதிலால் நேரு மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் காலத்தில் காங்கிரஸில் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டது. அதன் பின்னர் தற்போது ராகுல் காந்தியின் காலத்தில் காங்கிரஸ் ஒரு மிகப்பெரிய பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இன்றைக்கு பாஜக தலைவர்கள் அவரது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திக்கு முக்காடுகிறார்கள் அவர் சித்தாந்த ரீதியாக மக்களின் குரலாக தேசத்தின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் சிறு சிறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கு குழு அமைக்கப்படும்.

அக்டோபர் 2 ஆம் தேதி கன்னியாகுமரி முதல் சென்னைக்கும் நாகப்பட்டினத்திலிருந்து நீலகிரி வரையிலும் நடைபயணம் தொடங்கப்படும். அதில்  ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்

காங்கிரஸில் இளைஞர்கள் சாரை சாரையாக இணைந்து கொண்டிருக்கிறார்கள் நீதிபதிகள் காங்கிரஸில் சேர்கிறார்கள். ஆகவே நாம் மலைக்கோட்டையில் இருந்து செயின் ஜார்ஜ் கோட்டைக்கு செல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அது சாத்தியமாகும் இவ்வாறு அவர் கூறினார்

Leave A Reply

Your email address will not be published.