விஜய்யின் பிறந்த நாள் – கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரம். தமிழகத்திலேயே அதிகமான இளைஞர் பட்டாளத்தையும், ரசிகர் கூட்டத்தையும் கொண்டுள்ள ஒரு நடிகர் என்றால் அது விஜயை தான் சேரும்.ஒவ்வொரு விஜய்யின் படங்கள் திரையரங்கிற்கு வரும் நாள் தீபாவளி என்று தான் சொல்ல வேண்டும். பாலாபிஷேகம் செய்வது, கட்டவுட்கள் என அன்றைய நாள் ரசிகர்களின் மிகப்பெரிய திருவிழாக் கோலம் பூண்டதாகவே இருக்கும். திருச்சியில் உள்ள முக்கிய திரையரங்குகளில் விடியற்காலை முதலே காட்சிக்கு விஜயின் ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருவர். இந்த இக்கட்டான கொரோனா காலகட்டத்திற்கு மத்தியில் தமிழகம் மற்றும் நாடு முழுவதும் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்பட்ட ஒரு படமாக ஜனவரி மாதம் வெளிவந்த “மாஸ்டர்” படம் இந்த வருடத்தின் ஒரு சிறந்த படமாக இருக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை!நடிகர் விஜய் 1974 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். விஜய் ஒரு இயக்குநரின் மகனாக இருந்ததால், அவர் குழந்தையாக இருந்தபோது அவருக்கு பல வாய்ப்புகள் வந்தன. அவர் தனது முதல் திரைப்படமான “வெற்றி (1984)” ஐ தனது 10 வயதில் நடித்தார். இதைத் தொடர்ந்து “குடும்பம் (1984)”, “நான் சிகப்பு மனிதன் (1985)“, “வசந்த ராகம் (1986)“, மற்றும் “சட்டம் ஒரு விளையாட்டு(1987)“ ஆகிய படங்களில் நடித்தார்.தனது தந்தையின் இயக்கத்தில் குழந்தை கலைஞராக இருந்தபின், 1992 இல் “நாளைய தீர்ப்பு” திரைப்படத்தில் தனது பதினெட்டு வயதில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.அதன் பிறகு பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து விஜயை அவரது தந்தையால் அறியப்பட்ட காலத்தை மாற்றி அவரது தந்தை இவரால் அறியப்படுகிறார் என்ற நிலைக்கு அவரது புகழ் அதிகரித்துள்ளது.
தளபதி என்று ரசிகர்கள் மற்றும் ஊடகங்களால் குறிப்பிடப்பட்ட விஜய், அதிக சம்பளம் வாங்கும் நடிகர் மற்றும் தொழில்துறையில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராவார். 2017 ஆம் ஆண்டில், ரஜினிகாந்திற்குப் பின்னால், தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த இரண்டாவது நடிகரானார். 2019ம் ஆண்டு நிலவரப்படி, விஜய் 64 படங்களில் ஒரு முன்னணி நடிகராக நடித்துள்ளார், மேலும் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், எட்டு விஜய் விருதுகள், ஒரு இந்தியா டுடே விருது, சிமா விருது, காஸ்மோபாலிட்டன் விருது மற்றும் தேசிய திரைப்பட விருது யுகே, மூன்று எடிசன் விருதுகள் மற்றும் இரண்டு விகடன் விருதுகள். டாக்டர் எம்.ஜி.ஆரிடமிருந்து honorary doctorate பட்டம் பெற்றுள்ளார்.

இந்தநிலையில் நாளை விஜயின் 47வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில் ரசிகர்கள் இன்று முதலே தயாராகிக் கொண்டிருக்கின்றனர். திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை பகுதியில் முப்பெரும் விழாவாகவும் கூட நடத்தியுள்ளனர். இது ஒரு புறமிருக்க மற்றொரு புறம் மகிழ்ச்சியாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய்யின் 65வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளதால் ரசிகர்கள் கூடுதல் மகிழ்ச்சியுடன் இருந்து வருகின்றனர்.