திருச்சியில் PFI நிர்வாகி வீட்டில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை

0 479
Stalin trichy visit

திருச்சி, ஆக.1 திருச்சியில் தடை செய்யப்பட்ட PFI நிர்வாகி வீட்டில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை:-

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் நிர்வாகிகள் வீட்டில் அதிரடி சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் அதிலும் இன்று காலை திருவாரூர் முத்துப்பேட்டை பகுதியிலும் அதேபோல் திருச்சி சர்வதேச விமான நிலையம் அடுத்துள்ள காமராஜர் நகர் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் முன்னாள் மண்டல தலைவர் அமீர் பாஷா வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் திருச்சி மாவட்டம் துவாக்குடி வாழவந்தான் கோட்டை ராஜாஜி தெருவில் வசித்து வரும் முகமது சித்திக் வீட்டில் என்ஐஏ சோதனை. இவர் எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலாளராக உள்ளார். தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகியாக இருந்தவர். அப்பகுதியில் விமான நிலைய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.