ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து சி.பி.ஐ, சி.பி.எம். கட்சியினர் மறியல் போராட்டம்
திருச்சி, ஆக.1 மணப்பாறையில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 148 பேர் கைது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்தைக் கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்திற்கு புயல் வெள்ளநிவாரணம், மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை, விவசாயிகளின் உரமானியத்திற்கு நிதி மற்றும் 100 நாள் வேலை திட்டம், சுகாதாரம், கல்வி, நிதி ஒதுக்கீடு குறைப்பு செய்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிகுறைப்பு, கடன் தள்ளுபடி செய்யும் ஒன்றிய அரசன் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து கோவில்பட்டி சாலையில் இருந்து காமராஜ் சிலை, பேருந்து நிலையம் வழியாக ஊர்வலமாகச் ஐ.ஓ.பி. வங்கி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்றிய அரசைக்கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
மறியலில் ஈடுபட்டபெண்கள் உட்பட 148 பேரை மணப்பாறை போலீசார் கைது செய்தனர்.