லால்குடி விவசாயிகளுக்கு வெளி மாநில அளவிலான கண்டுணர்வு சுற்றுலா

0 43
Stalin trichy visit

திருச்சி, செப்.9- திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரம் வேளாண்மை துறை அட்மா திட்டத்தில் வெளி மாநில அளவிலான விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா கர்நாடகா மாநிலம் பெங்களூர் உள்ள ஸ்ரீ ஸ்ரீ வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறக்கட்டளை (SSIAST) லால்குடி வட்டார 20 விவசாயிகள் (02-09-26 முதல் 06-09-26 )5 நாட்கள் அழைத்து சென்று இயற்கை வேளாண்மை மற்றும் பல அடுக்கு வேளாண்மை முறைகள் முற்றிலும் ரசாயன உரங்கள் தவிர்த்து மண்ணில் உள்ள வளம் அதிகரிக்க செய்யும் பலவகை தானிய விதைப்பு முறைகள் பற்றியும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான இயற்கையான பொருட்களைக் கொண்டு தயார் செய்யும் பீஜாமிர்தம் கொண்டு விதை நேர்த்தி செய்தல் ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம் பயன்படுத்தி சாறு உறிஞ்சும் பூச்சிகள், தண்டு துளைப்பான், காய்த்துளைப்பான், பழ துளைப்பான் கட்டுப்படுத்திட தயார் செய்யும் முறைகள் செயல் விளக்கமாக விவசாயிகளைக் கொண்டு செய்து காண்பிக்கப்பட்டது.

உயிர் நொதி திரவம் மண்ணில் உள்ள நுண்ணூட்ட சத்துக்கள் உருவாக்கி இலைவழி தெளிப்பு செய்தல் புளித்த மோர் திரவம் தெளித்து பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துதல் பிரம்மாஸ்திரம், அக்னி அஸ்திரம், நீம் அஸ்திரம்,மீன் அமினோ அமிலம் தேனீ வளர்ப்பு மேற்கண்ட வழிமுறைகளில் இடு பொருள்கள் பயன்படுத்தி இயற்கையான முறையில் வேளாண்மை செய்யும் முறைகள் குறித்து முனைவர் ராஜா மணி,வெங்கடேஷ் ஆகியோர் விவசாயிகளுக்கு விரிவாக விளக்கி கூறினார்.

ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பு தொழிற்சாலை, திறன் மேம்பாடு மையம் ஆகிய இடங்களை அழைத்துச் சென்று விவசாயிகளுக்கு காண்பித்து விரிவாக விளக்கம் அளித்தனர். இறுதியில் இந்த கண்டுணர்வு சுற்றுலாவில் கலந்து கொண்ட விவசாயிகளின் அனுபவங்கள் நிறுவன தலைவர்கள் உடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இந்த இயற்கை வேளாண்மை கண்டுணர்வு சுற்றுலா அழைத்து சென்ற வேளாண்மைத்துறை அட்மா திட்டம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி சத்யபிரியா, தொழில்நுட்ப மேலாளர் சபரிச்செல்வன், உதவி தொழில் நுட்ப மேலாளர் கார்த்திக் லால்குடி வட்டார வேளாண்மை துறை அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.