மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய பேருந்து சேவை : அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

0 281
Stalin trichy visit

திருச்சி, ஆக.1  திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் தெனபரநாடு கிராமம் புத்தூர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில் போக்குவரத்து துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் மகளிர் அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய நடைமுறையில் உள்ள விடியல் பயணம் திட்டம் மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் மலை வழித்தட புற நகர பேருந்துகளில் மலைப்பகுதியில் மட்டும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தும் வகையில் மழை வழித்தட புறநகர பேருந்துகளை மலைப்பகுதியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  இன்று (01/08/2024)  தொடங்கி வைத்தார்.

அருகில் நகராட்சி நிருவாக துறை அமைச்சர் கே.என்.நேரு , போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் , பள்ளிக்கல்வித்துறை துறை அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி , சிறப்பு திட்ட செயலாக்க அரசு முதன்மை செயலாளர் மரு.தரேஸ் அகமது,மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், வணக்கத்திற்குரிய திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் , பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருன்நேரு , லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ.செளந்திர பாண்டியன் , துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் , முசிறி சட்ட மன்ற உறுப்பினர் ந.தியாகராஜன் , மண்ணச்சநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர்  சீ.கதிரவன், மணப்பாறை சட்ட மன்ற உறுப்பினர் ப.அப்துல்சமது ,போக்குவரத்து துறை பொது மேலாளர் (திருச்சி மண்டலம்)ஆ.முத்துகிருஷ்ணன், பொது மேலாளர் முகம்மது நாசர்(கூட்டான்மை தொழில்நுட்பம்) துணை மேலாளர்கள் புகழேந்திராஜ்(வணிகம்) கார்த்திகேயன்(தொழில்நுட்பம்) ரெங்கராஜன் (கூட்டாண்மைமனித வள மேம்பாடு) மற்றும் பலர் உடன் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.