திருச்சி தெற்கு மாவட்டத்தில் கலைஞர் சிலை திறப்பு : அமைச்சர் அன்பில் மகேஸ் அழைப்பு

0 252
Stalin trichy visit

திருச்சி, ஆக. 6 திருச்சி தெற்கு மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மூன்றாவது சிலை திறப்பு விழா அமைச்சர் அன்பில்மகேஸ் அழைப்பு, இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கழகத் தலைவரின் அறிவுறுத்தலின்படி, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதன் அடிப்படையில் இதுவரை கலைஞர் 100 என்ற தலைப்பில் 100 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு 101வது நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் இதுவரை இரண்டு சட்டமன்ற தொகுதியில் சிலை திறக்கப்பட்டு தற்போது திருவெறும்பூர் தொகுதியில் மூன்றாவது திருஉருவ சிலை 07.08.2024 புதன்கிழமை காலை 08.30 மணிக்கு திருவெறும்பூர் காட்டூர் அருகில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நுற்றரண்டு திருவுருவ சிலையை காணொளி காட்சி வாயிலாக கழக தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைக்க உள்ளார்கள் .விழாவுக்கு கழக முதன்மை செயலாளரும் – நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையிலும் எனது தலைமையிலும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட ,வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.