பா.ஜ.க. அரசைக் கண்டித்து திருச்சியில் மகிளா காங்கிரஸார் மனுதர்ம சாஸ்திரத்தை எரித்து போராட்டம்

0 19
Stalin trichy visit

திருச்சி, செப்.3 மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது எப்ஐஆர் பதிவு செய்த பாஜக அரசை கண்டித்து திருச்சியில் மகிளா காங்கிரஸார் மனுதர்ம சாஸ்திரம் எரித்து போராட்டம்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்புக்கும், சமூகப் பாகுபாட்டிற்கும் எதிராகக் குரல் கொடுத்த மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்கந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசியல் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்ட மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைமை அலுவலகமான அருணாச்சல மன்றம் முன்பு மகிலா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மேலும் மனுதர்ம சாஸ்திரத்தை எரித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மகிலா காங்கிரஸ் திருச்சி மாவட்ட தலைவர் அஞ்சு தலைமை தாங்கினார் மாநில செயலாளர் ஷீலா செலஸ் முன்னிலை வகித்தார். அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய செயலாளர் கமலாச்சி ராஜன்னா மற்றும் தமிழ்நாடு மாநில மகிலா காங்கிரஸ் தலைவி ராமலட்சுமி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாநில செயலாளர் அபிநயா திருச்சி மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் சித்ரா இணைச் செயலாளர் தமிழரசி மற்றும் மகிளா காங்கிரஸ் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கங்கா நாகேஸ்வரி அகிலா அம்மு சபிதா நிர்மலா பரமேஸ்வரி பழனியம்மாள் ஈஸ்வரி முத்துலட்சுமி ஜூலி சம்பூர்ணம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.