வேளாண் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் சைபர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
திருச்சி, செப். 3 வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாமின் 2 ம் நாளில் சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் பாதுகாப்பான பயன்பாடு குறித்த விழிப்புணர்வு.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்களின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாமின் 2 ம் நாள் நிகழ்ச்சிகள் பல்லபுரம் கிராமத்தில் செப்.2 ந்தேதி நடைபெற்றது.
காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் பாதுகாப்பான பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியரும் மாணவர் மன்ற ஆலோசகருமான அ. வள்ளியம்மை முன்னிலை வகித்தார்.
உடற்கல்வி இயக்குநர் சி. செந்தில்குமார் மாணவர்களுக்கு இணையத்தை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது, தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை பொறுப்புடன் கையாள்வது குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.
மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி ஆரம்பநிலை மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் பல்வேறு கலை மற்றும் திறன் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியின் மூலம் பொதுமக்களுக்கு சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுவதன் அவசியம் மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாமின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் உற்சாகமான பங்கேற்புடன் சிறப்பாக நிறைவடைந்தது.