திருச்சியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள்  பணியிட மாற்றம்

0 255
Stalin trichy visit

திருச்சி, ஆக. 6 : திருச்சி மாநகர காவல்துறையில் குறிப்பிட்ட சில காவல் நிலையங்களில் பணியாற்றிய 5 காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு அதிரடி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி கண்டோன்மெண்ட் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றிய துரைராஜ், திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் ரவிசங்கர், மாநகர குற்றப்பிரிவில் பால்தாஸ், தில்லைநகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய நாகநந்தன், விமான நிலையத்தில் பணியாற்றிய பாஸ்கரமூர்த்தி ஆகிய 5 பேரும் ஸ்ரீரங்கம் (சட்டம் } ஒழுங்கு) காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அனைவரும் தாமதமின்றி உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மாநகர காவல் ஆணையர் ந. காமினி  பிறப்பித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.