காட்டூரில் கலைஞர் சிலை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

0 454
Stalin trichy visit

  திருச்சி, ஆக. 7 திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க ஏற்பாட்டில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் காட்டூர் ஆயில்மில் செக்போஸ்ட், அருகில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு திருவுருவ சிலை திறப்புவிழா இன்று நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார்.

சிறப்புமிகு இவ்விழாவில் சென்னையில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர், கழக தலைவர் மு க ஸ்டாலின்  காணொளி மூலம் முத்தமிழறிஞர் சிலையை    திறந்து வைத்தார். முதலமைச்சருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கவிஞர் கனிமொழி எம்.பி, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத், துணைமேயர் திவ்யா மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக
பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் நன்றி கூறினார்

Leave A Reply

Your email address will not be published.