மர்ம காய்ச்சல் : 19ஆவது வார்டில் மேயர் ஆய்வு
திருச்சி, ஆக.8 திருச்சி மாநகராட்சி 19ஆவது வார்டியில் மர்ம காய்ச்சல் பரவுவதாக வந்த தகவலின் பேரில் மேயர் மு.அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி மாநகராட்சி மூன்றாவது மண்டலம் 19ஆவது வார்டு பெரியகடை வீதி, கள்ளர்தெரு, பீரங்கிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவுவதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தை தொடர்ந்து மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் மாநகராட்சி அலுவலர் மற்றும் பொறியாளர் களுடன் அப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார் . இந்த ஆய்வில் குடிநீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டிகளை சுத்தம் செய்யவும் ,குடிநீரின் குளோரின் அளவை அதிகரிக்கவும், குடிநீரை ஆய்வு செய்யவும் இது போன்ற பொதுமக்கள் புகார்களை உடனடியாக ஆய்வு செய்யவும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், நகர்நல அலுவலர் தலைமையிலான சுகாதாரத் அலுவலர்கள் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். சிலருக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட் டதும் தெரியவந்தது. குடிநீர் காரணமாக இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டத என்று குடிநீர் மாதிரி எடுக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கள்ளர்தெரு, தேவர் பூங்கா, மேலபுலிவார்டு, பீரங்கிகுளம், சிலோன்காரத்தெரு, பெரியக்கடைவீதி ஆகிய இடங்க ளில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், அப்பகுதி பொதுமக்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. இந்த ஆய்வில் நகரப் பொறியாளர் பி.சிவபாதம், செயற்பொறியாளர்கள் கே.எஸ். பாலசுப்ரமணியன், மா.செல்வராஜ், உதவி ஆணையர் சாலைத் தளவாளன் மற்றும் உதவி செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர்கள் உடன் இருந்தனர்.