முசிறி அருகே கள்ளக்காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை

0 236
Stalin trichy visit

திருச்சி, ஆக. 8  திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிமலை. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (29) ஐடிஐ படித்து விட்டு விவசாய வேலை செய்து வந்துள்ளார். திருமணம் ஆகவில்லை.

காட்டுப்புத்தூர் அடுத்த சீத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா (23). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது  . 5 வயதில் மகள் உள்ளார்.  பி.ஏ பட்டதாரியான கீர்த்தனா தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நர்சரி பள்ளியில் கடந்த சில மாதங்களாக ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்திக்கும், கீர்த்தனாவிற்கும் பல ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் கள்ள காதலாக மாறி உள்ளது. இந்த கள்ளக்காதல் விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரிந்தால் அவமானம் ஆகிவிடும் என்று நினைத்த கிருஷ்ணமூர்த்தி – கீர்த்தனா இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் ரைஸ் மில் அருகில் உள்ள மோட்டார் கொட்டகையில் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தொட்டியம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான காட்டுப்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறப்புக்கு காரணம் கள்ளக்காதல் விவகாரமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.