வாட்ஸ்அப் மூலம் இணைந்த ஆம்புலன்ஸ் குழுவினரால் விரைவாக கொண்டு செல்லப்பட்ட இதயம்
திருச்சி, செப். 2 மதுரையில் இருந்து பெரம்பலூர் நோக்கி நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் இதயம் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இதயம் கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் தடையின்றி விரைந்து செல்லும் வகையில் வாட்ஸ்அப் குழு மூலம் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆம்புலன்ஸ் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் வாட்ஸ்அப் மூலமே ஒருங்கிணைந்த ஆம்புலன்ஸ் குழுவினர் ஆங்காங்கே தயார் நிலையில் இருந்து இதயம் கொண்டு சென்ற ஆம்புலன்சுக்கு முன்னும் பின்னும் சென்று தடைவில்லா போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து இதயம் விரைவாக கொண்டு செல்லப்பட்டது.