இந்து வழக்கறிஞர் முன்னணி மாநில கலந்துரையாடல் கூட்டம்
திருச்சி,ஆக.10 திருச்சி சீராதோப்பு பாரதியார் குருகுலத்தில் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் வழிகாட்டுதலுடன் தொடங்கியது..
இந்நிகழ்வில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் காமாட்சி அம்மா குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இதில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் .கார்த்திகேயன் ஜி, மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் முத்துக்குமா,ர் இந்து வழக்கறிஞர் முன்னணி மாநில தலைவர் வழக்கறிஞர் விஜயராகவன், இந்து வழக்கறிஞர் முன்னணி மாநில பொதுச் செயலாளர் கார்த்திக் வெங்கடாஜலபதி ஜி உள்ளிட்ட 106 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.