எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்
திருச்சி, ஆக.10 எஸ் ஆர் எம் பல்கலைக்கழத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் முதலாமாண்டு பொறியியல் மற்றும் மேலாண்மைத் துறை இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான துவக்க விழா நடைப்பெற்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூரில் இயங்கி வரும் எஸ் ஆர் எம் பல்கலைக்கழத்தின் பொறியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் முதலாமாண்டு பொறியல் மற்றும் மேலாண்மைத் துறை இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான துவக்க விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தின் புல முதல்வர் ஆர். ஜெகதீஷ் கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். இந்திய அரசு, புது டெல்லி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணை செயலாளர், புவனேஸ்வரகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில் ஒரு மாணவனின் வாழ்க்கையில் நட்பு, குடும்பம், உடல் நலம், வெற்றி-தோல்வி, ஆசிரியர்கள் ஆகியவையின் சிறப்பையும், அவை எதிர்காலத்தில் பெரும் வெற்றியை ஏற்படுத்தும் என்று கூறினார்.
சிங்கப்பூர் டெலிகம்யூனிகேஷன் முதன்மை தொழில்நுட்பத் துறை, மனோஜ் பிரசன்ன குமார் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், எவ்வாறு நல்ல நண்பர்களும் ஈடுபட்டுடனான கல்வியும் மாணவர்களின் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதை வலியுறுத்தினார் பொறியாளர்கள் மிக பெரிய பிரச்சனைகளுக்கும் எளிதான விடைகளை அளிக்க வல்லவர்கள் என்பதை பல உதாரணங்கள் மூலம் வலியுறுத்தினார்.
பெங்களூரின் பயோகான் பயோலொஜிக்ஸ், இயக்குனர் வித்யாசாகர் கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில் நல்ல உணவு, கல்வி பயிலுதல் மற்றும் விடா முயற்சியின் இன்றியமையாமை ஆகியவற்றை பற்றி விளக்கினார்.
எஸ் ஆர் எம் பல்கலைக்கழத்தின் தலைவர் டாக்டர் சிவக்குமார் தனது தலைமையுரையில் நேரம். வாய்ப்புகள் மற்றும் உடல் நலம் பேணுதலின் முக்கியத்துவத்தை தெளிப்படுத்தினார்.
பல்கலைக்கழத்தின் உபதலைவர் எஸ் நிரஞ்சன், பல்கலைத்தலைமை
இயக்குனர் டாக்டர். சேதுராமன், எஸ் ஆர் எம் பல்கலைக்கழக காட்டங்குளத்தூர் மைய பதிவாளர் டாக்டர் எஸ். பொன்னுசாமி, பல்கலைக்கழக திருச்சி வளாக நிர்வாக இயக்குனர் டாக்டர். சம்பந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக ஆங்கிலத்துறை தலைவர் டாக்டர் சண்முகப்ரியா நன்றி கூறினார்.