மேஜர் சரவணன் நினைவிடத்தில் 52 அடி உயர தேசியக் கொடி

0 263
Stalin trichy visit

திருச்சி,ஆக.10  திருச்சியில் மேஜர் சரவணன் மெமோரியல் டிரஸ்ட் சார்பில் 52 அடி உயர தேசியக்கொடி பறக்க விடப்பட்டது .

கடந்த 1999 ஆம் ஆண்டு கார்கில் வெற்றியின் 25 வது ஆண்டு விழாவை நினைவுகூரும் வகையில், போரில் உயிர் தியாகம் செய்த “படாலிக் மாவீரன்” மேஜர் சரவணனின் நினைவாக 24 மணி நேரம் பறக்கக்கூடிய 52 அடி உயர தேசிய கொடி கம்பம் தமிழக அரசின் அனுமதியுடன் மேஜர் சரவணனின் 52வது பிறந்தநாளையொட்டி மேஜர் சரவணன் நினைவு அறக்கட்டளை திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே உள்ள மேஜர் சரவணன் நினைவு தூபியில் 52 அடி உயர தேசிய கொடியை ஓய்வு பெற்ற முன்னாள் தலைமைத் தளபதி தக்ஷின் பாரத் மேஜர் ஜெனரல் இந்திரபாலன் தேசிய கொடியை பறக்க விட்டு மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற மூத்த ஜெனரல் அதிகாரிகள் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜாலட்சுமி, என்சிசி அதிகாரிகள் மற்றும் பிற மத்திய, மாநில அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்தியாவிலேயே முதன்முறையாக பொது இடத்தில் 52 அடி உயரத்தில் பறக்க கூடிய தேசியக்கொடி இதுவே என்பது குறிப்பிடத்தக்கது .

Leave A Reply

Your email address will not be published.