பஞ்சகறை கொள்ளிடம் ஆற்றில் மேயர் ஆய்வு
திருச்சி, ஆக.13 திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் 1,வாடு எண் 4 கொள்ளிட கரையில் உள்ள பஞ்சகறையில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் அதிக அளவில் வரும் நேரங்களில் சலவைத் தொழிலாளர்கள் துணி துவைப்பதற்கு அதிகம் சிரமப்படுவதை தவிர்க்க சலவை தொழிலாளர்களுக்கான துணி துவைக்கும் இடம் அமைப்பதற்கு மேயர் மு. அன்பழகன் , மண்டலத் தலைவர் ஆண்டாள் ராம்குமார்,செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி ஆணையர் ஜெயபாரதி,உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாமன்ற உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோருடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்