சாலையின் மைய தடுப்பு சுவரில் நீட்டிக்கொண்டிருக்கும் கம்பிகளால் விபத்து அபாயம்
திருச்சி. ஆக. 26-திருச்சி – கரூர் புறவழிச் சாலையில் சாலையின் மைய தடுப்பு சுவரில் கம் பிகள் நீட்டிக்கொண்டு இருக்கிறது.இதனால் விபத்து ஏற்படும் அபா யம் உள்ளது.
திருச்சி மாநகராட்சியை தூய்மையான மற்றும் பசுமை யான நகரமாகமாற்றும் நோக் கில் பல்வேறு உள்கட்ட மைப்பு மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, நகரின் முக்கியப் போக்குவரத்து பகுதிகளில் /உள்ள சாலை மைய தடுப்பு சுவர்களை அழகுபடுத்தும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் கையில் எடுத்துள்ளது.
இதற்காக திருச்சி மாநகரப் பகுதியில் தற்போது மைய தடுப்பு சுவரில் பூச்செடிகள் மற்றும் பூக்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதற்காக சில இடங்களில் ஏற்கனவே ஏற்கனவே இருந்த தடுப்பு சுவர் பகுதிகள் இடிக்கப்பட்டு, மண் மற்றும் செடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் திருச்சி-கரூர் புறவழிச்சாலையில் உள்ள மைய தடுப்பு சுவர் இடிக்கப் பட்டு உள்ளது. இதனால் அதில் உள்ள கம்பிகள் வெளிப்புறமாக நீட்டிக் கொண்டு உள்ளது. இதன்கா ரணமாக அந்தவழியாக செல் லும்வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள் ளது. குறிப்பாக இரவு நேரங் க்ளில் கம்பிகள் தெளிவாக தெரியாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் அதில் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, இடிக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் பகுதிகளை உடனடி யாக சீரமைத்து, தெரியும் கம்பிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தடுப்புசுவர் அழகுப்படுத்தும் பணிகள் முடியும் வரை வாகன ஓட்டிகளுக்கு எச்ச ரிக்கை செய்யும் வகையில் தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண் டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.