மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி
திருச்சி, ஆக. 26 திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், வையம்பட்டியை அடுத்த சடையம்பட்டியில் உள்ள எருது குட்டைசாமிகோவிலில் மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி எனும் எருது ஓட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மந்தைகளில் இருந்து அழைத்து வரப்பட்ட நூற்றுக்கணக் கான காளைகள் குறிப்பிட்டதூரத்திற்கு அழைத்து செல்லப் பட்டு ஒரே நேரத்தில் ஓட விடப்பட்டது. அப்போது இலக்கை நோக்கிபோட்டி போட்டுக்கொண்டகாளைகள் ஓடி வெற்றி பெற்றது. பின்னர் தேவராட்டமும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.