துரை வைகோ எம்.பி. நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம் : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை

0 392
Stalin trichy visit

திருச்சி, ஆக.13 திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், திருச்சி கிழக்கு தொகுதி – திருவெறும்பூர் தொகுதிகளில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்  துரை வைகோ  ஆகஸ்ட் மாதம் 13, 14, 16, 21 தேதிகளில் பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கின்றார்.

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட ,வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.