கோட்டாத்தூரில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

0 244
Stalin trichy visit

திருச்சி, ஆக.13  திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டாத்தூர் வடக்கு தெருவில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்.

துறையூர் அருகே உள்ள கோட்டாத்தூர் கிராமத்தில் வடக்கு தெரு பகுதிக்கு கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்கலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் துறையூரில் இருந்து புத்தனாம்பட்டி செல்லும் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் காவல்துறையினர் பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறியதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.