வயிற்றுக் போக்கால் பலர் இறந்துள்ளதாக கூறுவது பொய் செய்தி : மேயர் பேட்டி
திருச்சி ஆகஸ்ட் 14 திருச்சி மாநகராட்சி 19, 20, 21 ஆகிய வார்டு பகுதிகளில் சாக்கடை நீர் கலந்த குடிநீர் வருவதால் அப்பகுதியில் காலரா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக வந்த தகவலின் பேரில் மாநகராட்சி அலுவலர்கள் அப்பகுதிக்கு சென்று குளோரின் பவுடர் தெளிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிருவாகத்தின் அலட்சியம் காரணமாக பலர் இறந்துள்ளதாகவும், பலரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சில தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அப்பகுதி மாமன்ற உறுப்பினரும் தகராறு செய்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இப்பிரச்சினைகள் குறித்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் 19 மற்றும் 21வது வார்டுகளில் பலருக்கு வயிற்று போக்கு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் அவர்கள் குடிநீரை காய்ச்சி குடிக்காதது தான். இது குறித்து ஆணையர் மற்றும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியும் பொதுமக்கள் அதை கடைபிடிக்கவில்லை. மரக்கடை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கும் பணி நிறைவடையாமல் உள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகளுக்கு நேரடியாக தண்ணீர் விநியோகிக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றுள்ளனர். தற்போது சிலர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவிரியிலிருந்து நீர் ஏற்றப்படும் பொழுது குளோரின் பவுடர் கலக்கப்படும் அந்த நீர் அப்பகுதியில் சென்ற அடையவில்லை என விசாரணையில் தெரியவந்தது. மேலும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அப்பகுதி மக்கள் எந்த பாதிப்பில்லை என தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் மருத்துவ முகாமும் நடைபெற்றுள்ளது. இது குறித்து மருத்துவரிடம் கேட்ட பொழுது மழைக்காலத்தில் தண்ணீர் கலங்கலாக வரும் பொழுது காய்ச்சி குடிக்காததால் ஏற்பட்ட பாதிப்பு என தெரிவித்துள்ளனர். தற்போது திருச்சி மாநகராட்சியில் 65வார்டுகளுக்கு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகப்பட்டு வருகிறது. எங்கு நேரடியாக பம்பிங் செய்யப்பட்டதோ அந்த இடத்தில் மட்டும் தான் சுகாதார பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் தண்ணீர் சாலைகள் தேங்காதபடி உடனடியாக அப்புறப்படுத்துவதற்கான மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து அரசுத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது
. தண்ணீரில் சாக்கடை கலந்த தொடர்பாக அப்பகுதி மக்கள் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்ததற்காக அப்பகுதி மாமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்களால் மக்கள் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு? அப்பகுதி மக்கள் சுமார் 10 பேர் 20 பேர் இறந்து போய்விட்டதாக வதந்தியை கிளப்பி உள்ளனர். ஆனால் அங்கு ஒரு உயிர் இழப்பு கூட இல்லை. இது குறித்து கேட்டதால் ஏற்பட்ட தகராறு தான் அங்கு யாரையும் மிரட்டவில்லை என்றார்.
திருச்சிக்கு மெட்ரோ ரயில் பணிகள் குறித்த தானே கேள்விக்கு ஒன்றிய அரசுக்கு இது குறித்தான கருத்துறை அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி வந்தவுடன் அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும். இதற்கான முயற்சிகளையும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.நிதி ஒதுக்கப்பட்டவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தூய்மை பணியாளர்களுக்கான பணி நேரம் அதிகப்படியாக உள்ளது என அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் கேள்விக்கு? தூய்மை பணியாளர்களுக்கு எட்டு மணி நேரம் தான் வேலை வழங்கப்படுகிறது. ஆனால் மழைக்காலங்களில் சில பாதிப்பு நேரங்களில் ஒரு சில மணி நேரம் கூடுதலாக பணி செய்கின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திடம் பேசி சரி செய்யப்படும் என தெரிவித்தார்