சுதந்திர தினத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பொது விருந்து
சமயபுரம் ஆக 15 சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 78 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இன்று பொது விருந்து நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 78 ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, பொது விருந்து மற்றும் பக்தர்கள் கைத்தறி சோலைகள் கோயில் அன்னதானம் மண்டபத்தில் இன்று வழங்கப்பட்டது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 78ம் ஆண்டு சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோயில் அன்னதான மண்டபத்தில் ஜாதி, சமய வேறுபாடு இன்றி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சமத்துவ விருந்தில் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு கைத்தறி சேலைகள் வழங்கினார்.
இவ்விழாவில் திருக்கோயில் அறங்காவல் குழு தலைவர் வி.இளங்கோவன்,, இணை ஆணையர் பிரகாஷ், சமயபுரம் பேரூராட்சி தலைவர் சரவணன், மற்றும் உள்ளுர் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.