திருச்சியில் புதிய சைபர் உதவி மையம் தொடக்கம்
திருச்சி, ஆக.22 திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி, திருச்சி சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புதிய ‘சைபர் உதவி மையம்’ அமைக்கப்பட்டு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட்டு வருகிறது. இந்தமையத்தின் முக்கிய செயல்பாடுகளாக சைபர் குற்றங்கள் குறித்துப் புகார் அளித்தவர்களின் தொலைபே சிக்கு பணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என்ற குறுஞ்செய்தி வந்திருந்தால், அவர்கள் எம்.ஆர்.எம்.போர்ட்டல் மூலமாகத் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற வழிவகை செய்கிறது.
பொதுமக்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டிருந்தாலோ அல்லது பணம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலோ அதை நிவர்த்தி செய்ய இந்த உதவி மையம் செயல்படுகிறது. இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.