47வது வார்டு கன்னிமார் கோவில் தெருவில் குப்பை அள்ளி பத்து நாள் ஆச்சி -திருச்சி மாநகராட்சிக்கு தகவல்
திருச்சி மாநகராட்சியில் வீடுதோறும் குப்பை சேகரிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கரோனா தடுப்பு பணிகள் காரணமாக துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க வரும் பணி தடைபட்டு உள்ளது. இதனால் மக்கள் வழக்கம் போல் குப்பைகளை வீதிகளில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இந்த வகையில் திருச்சி பீமநகர் மார்சிங்பேட்டை 47வது வார்டு கன்னிமார் கோவில் தெருவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குப்பைகள் தேங்கி கிடக்கின்றது.அவற்றை அப்புறப்படுத்த மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் முன்வரவில்லை. இந்த பகுதியின் அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த நிலையில் இங்கு குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது இதனால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
அதனால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இங்கே குப்பை அள்ளலே – மாநகராட்சியில் கொஞ்சம் சொல்லுங்க……..