பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு
திருச்சி, ஆக. 20 திருச்சி மாவட்டம் வையம்பட்டி புதுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர்லட்சுமணன் மகன் ஜெயசூர்யா (18) இவர் இருசக்கர வாகனத்தில் ரங்கநாதன் மனைவி வெள்ளைத்தாயி – (37), மற்றும் அவரது மகள் பார்கவி (13) ஆகிய இருவரையும் பின்னால் அமர வைத்துக் கொண்டு திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மீனாட்சி ஊரில் இருந்து கல்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தபோது இவருக்கு பின்னால் வந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோபால சமுத்திரத்தை சேர்ந்த கோபாலன் (69) என்பவர் ஓட்டி வந்த கார் இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த வெள்ளைத்தாய் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஜெயசூர்யா மற்றும் பார்கவி இருவரும் பலத்த காயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர் .மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த வெள்ளைதாயின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.