பைக் மீது மோதிய அரசுப் பேருந்து : இளைஞர் உயிரிழப்பு
திருச்சி, ஆக. 20 திருச்சி மாவட்டம் பண்ணப்பட்டி தெற்கு அமைய புரத்தைச் சேர்ந்தவர் மூக்கன் மகன் ரவிச்சந்திரன்(27) . இவர் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள அமையபுரம் கிராமம் கணக்கப்பிள்ளைகள் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு எதிர் திசையில் கரூரிலிருந்து மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக இவரது இருசக்கர வாகனத்தில் மோதியது .
இதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த ரவிச்சந்திரனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.