உறுப்பினர் அட்டை வழங்கிய அதிமுகவினர்
திருச்சி, ஆக.26 திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் துறையூர் வடக்கு ஒன்றியத்தில் ஒன்றிய கழக செயலாளர் சேனை பெ. செல்வம் தலைமையில் கண்ணனூர் ஊராட்சி கொத்தம்பட்டி கிளை கழக பகுதியில் பொறுப்பாளர் ஒன்றிய கழக இணைச் செயலாளர் மகேஸ்வரி சுப்பிரமணியம், ஒன்றிய கழக மாவட்ட பிரதிநிதி தனம் ஜெகநாதன், வழக்கறிஞர் பிரிவு தங்கையா, எம்ஜிஆர் இளைஞரணி ஒன்றிய கழக இணைச்செயலாளர் மணி, கிளை கழக செயலாளர் சக்திவேல், வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று கழக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையை நேரில் வழங்கினார்கள்