திருச்சியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

0 245
Stalin trichy visit

திருச்சி, ஆக. 29  திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த பள்ளியின் இமெயில் ஐடிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளித்தனர் மேலும் பள்ளி நிர்வாகத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் தனியார் பள்ளிக்கு வந்த காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு பள்ளி கட்டிடம் மற்றும் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

குறிப்பாக தமிழகம் முழுவதும் இந்த தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளிகள் இயங்கி வருகிறது அங்குள்ள பள்ளிகளுக்கும் ஈமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது அதனை தொடர்ந்து அங்குள்ள பள்ளியில் விடுமுறை அளிக்கப்பட்டு அங்கும் போலீசார் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.