பெண் வக்கீல் இறப்பு : பிரபல தனியார் மருத்துவமனை மீது வக்கீல்கள் குற்றச்சாட்டு

0 517
Stalin trichy visit

திருச்சி, ஆக. 31  திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் குற்றவியல் வழக்கறிஞர்  சண்முகப்பிரியா (வயது 29)  என்பவர்  இரண்டு தினங்களுக்கு முன்பாக கரு கலைப்பிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கருக்கலைப்பு முடிந்த பிறகு மதியம் 12 மணி அளவில் திடீரென்று அவருக்கு மாரடைப்பு  ஏற்பட்டு இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

இந்த தகவல் வக்கீல்கள் மத்தியில் பரவியது  மூன்று மாத கரு கலைப்பிற்காக வந்த 29 வயது  பெண் எப்படி இறந்திருக்க முடியும் என அங்குள்ள மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் கேட்டுள்ளனர்.  அதில் ஒரு மருத்துவர் கோபமாக எங்களிடம் உங்களுக்கு தேவைப்பட்டால் போராட்டம் பண்ணுங்கள் என்று எங்களிடம் கூறினார்.

திருச்சியில் 4000 வக்கீல்கள் உள்ளனர். இதே போல் கோபி கண்ணன் என்ற வழக்கறிஞரின் மனைவி தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பிற்காக அனுமதிக்கப்பட்ட இயற்கை எய்தினார் அதை நாங்கள் விட்டுவிட்டோம்.

ஆனால் இன்று வழக்கறிஞர் சங்கத்தில் இருந்து நாங்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி இறந்து போன எங்கள் வழக்கறிஞர் உடலை எடுத்து சென்றோம்.

வழக்கறிஞர் ஆகிய எங்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்கள் இதே போல் ஒன்று சேர்ந்து கேட்பார்களா என்று சொல்ல முடியாது பணம் கொடுத்தால் தான் உடலை எடுத்துச் செல்ல முடியும் என்று சொல்வார்கள்.

வழக்கறிஞர்கள் தப்பு பண்ணினால் மாதம் பத்து வக்கீல்களுக்கு மேல் பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கிறது. அதேபோல் டாக்டர்கள் தவறு செய்தால் டாக்டர் மீது எந்த மெடிக்கல் போர்டு நடவடிக்கை எடுக்கிறது. இது ஆரோக்கியமான செயலாக தெரியவில்லை

மருத்துவத்தில் குறைபாடு உள்ளது சொத்தைத் தவிர எல்லாத்துலையும் கையெழுத்து வாங்குகிறார்கள்.  மருத்துவமனை மீது தவறு இருந்தால் கண்டிப்பாக வக்கீல்கள் ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுப்போம்

Leave A Reply

Your email address will not be published.