கலைக்காவிரி கல்லூரியில் நுண்கலைப் போட்டி

0 355
Stalin trichy visit

திருச்சி, ஆக. 31  கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான நுண்கலைப் போட்டி விழா இன்று நடைபெற்றது இந்நிகழ்விற்கு கல்லூரியின் செயலர் தந்தை அருள்பணி லூயிஸ் பிரிட்டோ  தலைமை ஏற்றார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. நடராஜன்  முன்னிலை வகித்தார்.

கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளின் தொடக்க விழா சிறப்பு விருந்தினராக திருச்சி ஹலோ FM ன் நிலையத் தலைவர் டைரி சகா  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். அவர் பேசும்போது, கலை என்ன செய்யும் கலை ஒரு சமூகத்தை சரியானப் பாதையில் மடை மாற்றும் கலை இளைஞர்களை வழிநடத்தும் கலை செவ்வியல் பண்புமிக்க சமூகத்தை உருவாக்கும் கலை இளைஞர்களை நல்வழியில் கொண்டு செல்லும் கலையால்தான் இந்தச் சமூகம் மேம்பாடு அடையும் என்று கலையின் சிறப்பை குறிப்பிட்டார். கலை வழியாக இந்த இளைஞர்கள் தன் வாழ்க்கையில் உயர்ந்த நிலை அடைவதற்கு அதை ஒரு பற்றுக் கருவியாக பற்றிக்கொண்டு வாழ்க்கையில் உயர்வடைய வேண்டும் என்றும் கலைதான் ஒட்டுமொத்த சமூகத்தின் ஆன்மா என்றும் கலைதான் பாலின பேதங்களைக் கடந்து மாநில எல்லைகள் எல்லாம் கடந்து இந்த சமூகத்தை ஒற்றுமை பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய ஒரு மிகப்பெரிய சமூக மாற்றுக்கருவி என்றும்  கலை ஒரு சமூகத்தை உயிர்ப்போடு வைத்திருக்கும் என்றும்  கலை கற்றுக் கொள்வதன் வாயிலாக இன்றைய இளைய தலைமுறை குறிப்பாக நவீன தலைமுறை தற்கொலை எண்ணங்களில் இருந்தும் மன அழுத்தங்களிலிருந்தும் இளைய தலைமுறையை மீட்டு எடுப்பதற்கு கலை ஒரு மிகப்பெரிய துணையாக அமைகிறது. எனவே கலையை கற்றுக்கொண்டு இந்த மாணவர்கள் வாழ்க்கையில் வெல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து பத்து வகையான செவ்வியில் போட்டிகள் நடைபெற்றது செவ்வியல் நடனம் தனிநபர் செவ்வியல் குரலிசை தனி நபர் மெல்லிசை குரலிசை தனி நபர் மெல்லிசை குரல் இசை குழு கருவிசை தனி நபர் தாளக் கருவி இசை தனிநபர் ரங்கோலி என்று சொல்லப்படுகின்ற அரங்க கோலம் தனி நபர் வண்ண ஓவியம் வரைதல் நாட்டுப்புறப்பாடல் குரல் இசை நாட்டுப்புற நடனம் என்கின்ற பத்து வகையான போட்டிகள் நடைபெற்றது இப் போட்டிகளில் 15க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கெடுத்து ஏறத்தாழ 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள் நிறைவு விழா மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

நிறைவு விழாவில் தூய வளனார் தன்னாட்சி கல்லூரியின் அதிபர் அருள்தந்தை பவுல்ராஜ்  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரை வழங்கினார்கள் அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். ஒட்டுமொத்த சுழற் கேடயத்தையும் வென்று கிளாசிக் பெஸ்ட் 2024 சுழற் கடத்தை ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி அணியினர் வென்றனர். இந்நிகழ்வை பேராசிரியர்கள் கி. சதீஷ் குமார், இல. கோவிந்தன்,  லட்சுமி, ஆக்னஷ் ஷர்மினி, பிரகாஷ், ராஜேஷ் பாபு ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கி. சதீஷ் குமார் வரவேற்புரையாற்றினார். முனைவர் இல. கோவிந்தன் நன்றி கூறினார். நிகழ்வை தேஜினி,  ஏஞ்சல் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.